கூகுள் நிறுவனத்தின் வீடியோ அழைப்பு சேவையான Google Meet தற்போது மிகவும் பிரபலமாகிவருகின்றது.
இதில் ஒரே நேரத்தில் 49 நபர்கள் வரையில் வீடியோ அழைப்பில் ஈடுபட முடியும். இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பில் தற்போது பார்க்கலாம்.
முதலில் https://apps.google.com/meet/ எனும் தளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் Join a meeting அல்லது Start a meeting என்பதை தெரிவு செய்யவும்.
தற்போது தோன்றும் திரையின் கீழ்ப் பக்கத்தில் காணப்படும் 3 புள்ளிகளின் மீது கிளிக் செய்யவும். அதன்போது தோன்றும் மெனுவில் Change Layout என்பதை கிளிக் செய்யவும்.
இதன்போது 4 தெரிவுகள் காண்பிக்கப்படும். அவற்றில் Tiled என்பதை தெரிவு செய்து Tiles எண்ணிக்கையினை 49 என மாற்றிக்கொள்ளவும்.