தமிழில் புதுபுது அர்த்தங்கள், புதுவசந்தம், முகவரி, நட்புக்காக, படையப்பா உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் சித்தாரா.
1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சித்தாராவுக்கு தற்போது 47 வயதாகிறது.
ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்று சித்தாரா ஒரு பேட்டியில் முன்னர் கூறியிருந்தார்.
அவர் கூறுகையில், திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற முடிவில் நான் இருக்கிறேன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
எனது தந்தையை என்னால் மறக்கவே முடியாது. எனது வாழ்க்கையில் அவர் முக்கியமான நபராக இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் இறந்துபோனார். அந்த இழப்பை என்னால் தாங்க முடியவில்லை.
அவர் மறைவுக்கு பிறகு திருமணத்தை பற்றியே நான் சிந்திக்கவில்லை. இப்போது மணமகன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்கின்றனர். திருமணம் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை என கூறியுள்ளார்.