வாய்ப்பு இல்லாததால் மேலும் ஒரு நடிகர் தற்கொலை செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா பரவல் காலத்தில் சினிமா துறை பல மரணங்களைச் சந்தித்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக மூத்த நடிகர்கள் முதல் இளம் கலைஞர்கள் வரை மரணத்தைத் தழுவி வருகின்றனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்..
ஏப்ரல் மாதம் இந்தி நடிகர் இர்பான் கான், மரணமடைந்தார். மறுநாளே, இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணமடைந்தார். இது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.
பின்னர் சில சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொண்டனர். கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார். அடுத்து சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அடைய வைத்தது.
வாய்ப்பு இல்லாத மேலும் சில நடிகர்கள், கொரோனா காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவால் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாத காரணத்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் நடிகர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அக்ஷத் உட்கர்ஷ் போஜ்புரியில் சில படங்களில் நடித்திருப்பவர், அக்ஷத் உட்கர்ஷ் (Akshat Utkarsh). எம்.பி.ஏ முடித்துள்ள இவர், பீகாரில் உள்ள முஸாபர்பூரை சேர்ந்தவர்.
இந்தி படங்களில் நடிப்பதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன், மும்பை வந்தார். அந்தேரி பகுதியில் வாடகை வீட்டில் தனது தோழியுடன் தங்கியிருந்தார். தற்கொலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அவர் தனது வீட்டுக்கு போன் செய்துள்ளார்.
அப்போது டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர், பிறகு அழைப்பதாகக் கூறியுள்ளனர். சீரியல் முடிந்து அவர்கள் அழைத்தபோது அவரிடம் இருந்து பதில் இல்லை.
அக்ஷத்தின் தோழி அவர் ஃபேனில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக, அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். கடன் வாங்கி இருந்தார் பின்னர் அம்போலி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து உடலைக் கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் தரப்பில் கூறும்போது, அக்ஷத் வழக்கம்போல படுக்கைக்கு சென்றதாக அவர் தோழி கூறியுள்ளார். வேலை இல்லாததால், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி இருக்கிறார், அக்ஷத்.
மன உளைச்சல் இதனால் மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர்.
ஆனால், அக்ஷத்தின் உறவினர்கள், இது கொலை என்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பதாகவும் கூறியுள்ளனர்.



















