தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரத்தில் அடுத்த கட்டநடவடிக்கை தொடர்பில் ஆராய தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்று கூடின.
யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தியாக தீபம் திலீபனின் நினைவு நிகழ்விற்கு அரசாங்கம் பல்வேறு விதமான தடைகளை விதித்துள்ளது. இதனால், தமிழ் தேசிய பரப்பில் உள்ள பத்து கட்சிகள் இணைந்து செயற்படுவது என தீர்மானித்தனர்.
இவ்வாறு இணைந்த கட்சிகள் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது என தீர்மானித்தது. அண்மையில் கதவடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய பரப்பில் நாம் அடுத்த கட்டமாக எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் பத்துக் கட்சிகளும் இன்று கலந்துரையாடினர்.
எவ்வாறாயினும், மேற்படி இந்த கலந்துரையாடலுக்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.