நானுஓயா – டெஸ்போட் பகுதியில் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் உடற்கூற்று பரிசோதனைக்காக இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பட்டுள்ளன.
குறித்த மாணவியின் பிரேத பரிசோதனை இன்று நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்றது. எனினும் மரணத்திற்கான காரணம் அறியப்படவில்லை.
இந்த நிலையில் சடலத்தின் மாதிரிகள் உடற்கூற்று பரிசோதனைக்காக இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நானுஓயா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ம் தரத்தில் கல்வி பயின்ற குறித்த மாணவி நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த மாணவி நள்ளிரவு 1.50 அளவில் பின்னர் வீட்டில் இருக்கவில்லை என காவற்துறையில் முறையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த மாணவியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, குறித்த மாணவியின் சடலம் நானுஒயா டெஸ்போட் கீழ் பிரிவிலுள்ள ஆற்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டிருந்தது.