பொதுவாக லெமனில் விட்டமின் சி இருப்பது நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது நமக்கு தெரியும்.
ஆனால் லெமன் நோயெதிரிப்பு மட்டுமல்ல இன்னும் எண்ணிலடங்காத நன்மைகளை தருகிறது.
அதைப் பற்றி இங்கே காணலாம்.
- குளிர் காலத்தில் ஏற்படும் சலதோஷம் மற்றும் இருமல் போன்ற அழற்சியை எதிர்த்து போராடுகிறது.
- காலரா மற்றும் ஈ.கோலை போன்ற நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. காலரா உணவு மூலம் பரவுவதால் லெமன் அதன் பரவலை தடுக்க உதவுகிறது.
- லெமனில் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. இவை இதய தமனிகளை ஆரோக்கியமாக வைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- தமனி போன்ற இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைபடுவதை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. எனவே உங்க நல்ல ஆரோக்கியத்திற்கு தினசரி லெமன் தோல், லெமன் ஜூஸ் மற்றும் லெமன் ஆயில் ஆகியவற்றை பயன்படுத்தி வரலாம்.
- வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு கிளாஸ் லெமன் சாறு கலந்து குடித்து வாருங்கள்.
- இது காலையில் உங்களுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கவும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
- லெமன் சாற்றை முகத்தில் தேய்த்து வர உங்க சருமம் பளபளப்பாக மாற வாய்ப்பு உள்ளது.
- உங்க முகத்திற்கு நீங்கள் லெமன் ஆயிலை பயன்படுத்துங்கள். இது சருமத்தை மீள் தன்மை உடையதாக வைக்கவும், இளமையாக வைக்கவும் உதவுகிறது.
- உங்க கூந்தல் ஆரோக்கியத்திற்கு லெமன் மற்றும் தயிர் சேர்த்து பூசி வருவது கூந்தலை பளபளப்பாக வைக்கவும், தொற்று இல்லாமல் காக்கவும் உதவுகிறது.
- உங்க பற்களை பராமரிக்க எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி வரலாம். இது பல்லவியில் இருந்து விடுபட உதவுகிறது.
- புகைப்பிடித்தலால் பற்களில் ஏற்படும் நிகோடின் கரையை அகற்ற லெமன் உதவுகிறது. லெமன் சாறு கொண்டு ஈறுகளை மசாஜ் செய்யும் போது ஈறுகளில் ஏற்படும் இரத்த போக்கை நிறுத்துகிறது.
- மேலும் இது பல்வேறு ஈறுநோய்களில் இருந்து எழக்கூடிய துர்நாற்றத்தை போக்குகிறது. எனவே இவ்வளவு நன்மைகள் தரும் லெமனை உங்க உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.