நீர்கொழும்பு – 50 ஏக்கர் பகுதியில் வர்த்தகர் ஒருவரின் இல்லத்தில் சுமார் 3 கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 காவல்துறை குழுக்கள் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நேற்று முற்பகல் குறித்த இல்லத்திற்குள்; பிரவேசித்த 7 பேர் கொண்ட குழு, ஆயுத முனையில் இந்த கொள்ளையை புரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிற்றூர்ந்து வாகனம் மற்றும் உந்துருளி என்பவற்றில் கொள்ளையர்கள் பிரவேசித்துள்ள நிலையில், காவல்துறை மோப்ப நாயினை கொண்டும் அந்த பகுதி சோதனையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள சி.சி.ரி.வி காணொளி காட்சிகளையும் விசாரணைக்கு பயன்படுத்துவதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.