நட்ஸ் ஒவ்வொன்றும் தனித்துவமானவை மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.
ஆனால் நம்மில் சிலருக்கு இந்த நட்ஸ் வகைகளை வறுத்து சாப்பிட்டால் நன்மை கிடைக்குமா அல்லது பச்சையாக சாப்பிட்டால் நன்மை கிடைக்குமா என்ற சந்தேகம் காணப்படும்.
அந்தவகையில் தற்போது நட்ஸ் வறுத்து சாப்பிடுவது நல்லதா? பச்சையாக சாப்பிடுவது நல்லதா? என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.
அந்தவகையில் வறுத்த நட்ஸ் வகைகள் சிறந்ததா அல்லது பச்சையாக சாப்பிடுவது சிறந்ததா என்பதை அறிந்து கொள்வோம்.
வறுத்த நட்ஸ்
நட்ஸ்யை பச்சையாக சாப்பிடுவதற்கும் மற்றும் வறுத்து சாப்பிடுவதற்கும் இடையே ஊட்டச்சத்துக்களில் சிறிய வித்தியாசம் காணப்படுகிறது.
அதிக வெப்பநிலையில் வறுக்கும் போது நட்ஸின் சில ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படுகின்றன.
இதில் கார்ப்ஸ் மற்றும் புரதங்களின் எண்ணிக்கையில் எந்த மாறுபாடும் இல்லாவிட்டாலும் ஒரு கிராம் கொழுப்பில் கலோரிக்கும் கொழுப்புக்கும் சிறிது வித்தியாசம் ஏற்படுகிறது.
வறுத்த கொட்டைகளை சூடுபடுத்துவதால் கொழுப்புகள் சேதமடைந்து ஆக்ஸைடு ஆகிறது.
நட்ஸ்கள் வெப்பத்திற்கு உள்ளாகும் போது அவை வேதிவினைகளுக்கு உட்பட்டு அவற்றின் கட்டமைப்புகள் மாறுகின்றன. இது தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் என்பது அதிகப்படியான செல்களை சேதப்படுத்தும்.
வறுத்த கொட்டைகளில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் ஆக்சிஜனேற்ற அபாயமும் ஏற்படுகிறது. கொழுப்பு ஆக்ஸிஜனுடன் எளிதில் வினைபுரிந்து ஆக்ஸினேற்றத்தை ஏற்படுத்தும். இது கொட்டைகளின் ஆயுளை குறைக்கிறது.
கொட்டைகளை வறுத்தெடுப்பதனால் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உருவாக வழிவகுக்கிறது. அதிக வெப்பநிலையில் வறுத்தெடுப்பது அதிக விகிதத்தில் அக்ரிலாமைடு உருவாக வழி வகுக்கும். குறிப்பாக பாதாம் போன்ற நட்ஸை வறுக்கும் போது இந்த அபாயம் உண்டாக வாய்ப்புள்ளது.
பச்சையாக சாப்பிடுவதால் ஏற்படும் தீங்குகள்
இது உங்களுக்கு சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பாக்டீரியாக்களின் விகாரங்களைக் கொண்டுள்ளன.
எனவே பச்சையாக நட்ஸ் வகைகளை கழுவாமல் சாப்பிடும் போது சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலை ஆகிய பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த பாக்டீரியாக்களை அளிக்க நீராவி மூலம் கொட்டைகளை அவிப்பது அல்லது சுத்தமாக கழுவி சாப்பிடுவது நல்லது.
முடிவு
ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை ஸ்நாக்ஸ் ஆக எடுப்பதற்கு பதிலாக நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
எனவே நட்ஸ்யை வறுத்து சாப்பிடலாமா அல்லது பச்சையாக சாப்பிடலாமா என்பதை அதன் நன்மை மற்றும் தீமை அடிப்படையில் தேர்வு செய்யுங்கள்.
வறுத்த கொட்டைகளில் அதிக கலோரிகள், உப்பு மற்றும் கொழுப்பு உள்ளது. எனவே எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வறுத்த கொட்டைகள் எடுக்க வேண்டாம்.