பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள நொயிஸி-லெ-செக்கில் உள்ள ஒரு வீட்டில் நடந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் குழந்தைகள்.
இலங்கை பின்னணியுடைய குடும்பமொன்றிலேயே இந்த வன்முறை நடந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. வீட்டு வளாகத்தில் ஒரு சுத்தி மற்றும் கத்தி காணப்பட்டன.
குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த 5 பேரும் வீட்டை சுற்றி இறந்து கிடந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குவர். மேலும் ஐந்து பேர் கத்தி வெட்டு காயத்திற்குள்ளாகியுள்ளனர். அதில் மூன்று பேர் உயிராபத்தான் நிலையில் உள்ளனர்.
சனிக்கிழமை காலை 11 மணியளவில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சம்பவ இடத்தில் இரண்டு பேர் இறந்திருந்தனர். மேலும் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இறந்தவர்கள், மற்றும் சந்தேகநபர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.
சம்பவ இடத்தில் பலத்த காயம் மற்றும் மயக்க நிலையில் காணப்பட்ட ஒருவர் சந்தேக நபராக சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சிகிச்சைக்காக கிளிச்சியில் உள்ள பியூஜோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.