பிரான்சில் பிரெஞ்சு ரிவியரா கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளில் அலெக்ஸ் புயலால் கன மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பேரழிவு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் இதுவரை 18 பேர் மாயமானதாகவும், மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் அலெக்ஸ் புயல் காரணமாக ஆறுகள் கரைகளை உடைத்ததால் பாலங்கள் இடிந்து சாலைகள் நீரில் மூழ்கின.
சனிக்கிழமை காலை மழை தணிந்ததால் அதுவரை விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டது, ஆனால் பிரளயத்தின் தாக்கம் இன்னும் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதனிடையே, சனிக்கிழமையன்று நைஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டதாகக் கூறினார்,
ஆனால் தீயணைப்பு வீரர்கள் இந்த எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
மட்டுமின்றி, இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை முழுவதும் நூற்றுக்கணக்கான மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன,
ஆனால் வெள்ளப்பெருக்கு காரணமாக மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.