திருப்பூரில் மதுபோதையில் வீட்டு முன்பு நிர்வாணமாகப் படுத்துக் கிடந்த நபரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கும் இவரின் வீட்டின் அருகே குடியிருக்கும் செல்வம் என்பவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு பயங்கர மதுபோதையில் இருந்த சுரேஷ்குமார் தனது வீட்டிற்குள் செல்லாமல், வீட்டின் வெளியே நிர்வாணமாக படுத்துக் கிடந்துள்ளார். இதனை கண்ட செல்வம், அவரை எழுப்பிக் கண்டித்ததோடு வீட்டிற்குள் சென்று உறங்குமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்வம், அருகே இருந்த கல்லை எடுத்து சுரேஷ்குமாரின் தலையில் போட்டுக் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.