நாட்டில் திடீரென சமூக மட்டத்தில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளியைத் தொடர்ந்து சில கட்டுப்பாடுகள் உடனடியாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய, சில பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்ததோடு, சில பாடசாலைகள், களனிப் பல்கலைக்கழகம் என்பன மூடப்பட்டதோடு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமன்றி, பொதுப்போக்குவரத்தில் ஆசனத்திற்கு அளவான பயணிகளை உள்ளடக்குமாறும், மேலும் விடுமுறையில் இருக்கும் முப்படைகளையும் கடமையில் மீள் அறிவித்தல்வரை சேவைக்கு வரவேண்டாமெனவும், பொது மக்களை கொரோனா சுகாதார அறிவுறுத்தலுக்கமைய செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், எந்த ஒரு அரச அலுவலகத்திலும் நாளை முன்னெடுக்கப்படவிருந்த பொது மக்களுக்கான நாள் நாளை முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தினம் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.