சென்னையில் கடந்து ஓராண்டாக ராயல் என்பீல்டு வகை இருசக்கர வாகனத்தை குறிவைத்து திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போனதும், அவை அனைத்தும் கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக, ஓட்டிச்சென்று விற்பனை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள செல்போன் டவர் சிக்னல்களை ஆராய்ந்ததில், சந்தேகப்படும்படி 3 எண்கள் அடிக்கடி தொடர்பில் இருந்ததை அறிந்த போலீசார், தஞ்சையைச் சேர்ந்த ஷஃபி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில், அவரது கூட்டளிகளான சிபி, அமீர்ஜான் ஆகியோரையும் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து 7 ராயல் என்பீல்டு வாகனங்கள் உட்பட 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.