கொழும்பு கடற்கரைகளில் இந்த வார இறுதியில் கரையொதுங்கிய குறைந்தது பத்து ஆமைகள் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை கடற்கரையில் நேற்று மூன்று ஆமைகளின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இன்று, மேலும் ஐந்து உயிரிழந்த ஆமைகளின் உடலங்கள் காலி முகத்திடல் கடற்கரையில் ஒதுங்கின.
மேலும் இரண்டு ஆமைகளின் உடலங்கள் வெள்ளவத்தை கடற்கரையில் கரையொதுக்கின.
இதனை அடுத்து ஆமைகளின் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிய நிபுணர்களின் கருத்துகளைப் பெற கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் இருந்து நீதிமன்ற உத்தரவு கோரப்படும் என்று வன விலங்குத்துறை இயக்குநர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
பருவத்தில் ஆயிரக்கணக்கான ஆமைகள் முட்டையிடுவதற்கு கடற்கரைகளுக்கு வரும்போது, மீன்பிடி வலைகளில் சிக்கி இறப்பது பொதுவானது என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், ஏராளமான ஆமைகள் உயிரிழந்தமை குறித்து ஆராய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்