கேரளாவில் தங்கை முறை கொண்ட பெண்ணை அடைவதற்காக மருத்துவர் ஒருவர் செய்த மோசமான செயல் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலாவில் வசித்து வருபவர் மருத்துவர் சுபு. இவர் அங்குள்ள அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சுபுவின் தங்கை முறை கொண்ட பெண் ஒருவர் அதே பகுதியில் திருமணம் செய்து கொண்டு, கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
ஆனால், சுபுவுக்கு அந்த பெண் மீது ஆசை என்பதால், அவரை இரண்டாம் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக, குறித்த தம்பதியை பிரிப்பதற்கு பல வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது, அந்த இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி, அவரது கணவருக்கு மொட்டை கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இது பற்றி வர்க்கலா காவல்நிலையத்தில் கணவர் புகார் அளித்தார். அப்போது, மருத்துவர் சுபுவும் அவருடன் சென்று நல்லவர் போல் புகார் அளித்திருக்கிறார்.
இது ஒருபுறம் எனில், இளம்பெண், கணவர், உறவினர்களின் செல்போன்களுக்கு அந்த இளம் பெண்ணின் ஆபாச படங்கள் வாட்ஸ்-அப்பில் சுபு அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால், அந்த பெண், இது எல்லாம் கணவனின் வேலையாகத் தான் இருக்கும் என்று அத்ர்ச்சியடைந்து, காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்திருக்கிறார். அப்போதும் அந்த பெண் உடன் சுபு சென்றிருக்கிறார்.
இதற்கிடையில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில், ஆபாச படங்கள், மொட்டைக்கடித விவகாரம் குறித்து விசாரிக்க உதவி கமிஷனர் பிரதாப சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து தனிப்படை அமைத்து செல்போன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகைப்படங்கள் குறித்த தகவல்களை பொலிசார் சேகரித்தனர்.
இதில், நெடுமங்காடு அருகே ஆநாடு பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் (30), என்பவர் ஆபாச படங்களை அனுப்ப பயன்படுத்திய சிம் கார்டை வாங்கியது தெரியவந்தது.
அவர் அந்த சிம் கார்டை, தனது நண்பரான டிவி நடிகர் ஜாஸ்மிர்கானுக்கு கொடுத்திருக்கிறார். இவரும், மருத்துவர், சுபுவும் நண்பர்கள் என்பதால், சுபு கூறிய படி ஜாஸ்மிர்கான் அந்த செல்போனில் இருந்து இளம்பெண்ணின் படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி குறித்த பெண்ணுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
இது எல்லாம் விசாரணையில் தெரியவந்ததால், பொலிசார் மருத்துவர் சுபு, டிவி நடிகர் ஜாஸ்மிர்கான் மற்றும் ஸ்ரீஜித் உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும், இதி ஸ்ரீஜித் என்பவர் சிம்கார்டை மோசடி மூலம் வாங்கியிருக்கிறார். அதாவது ஸ்ரீஜித் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர் என்பதால், அவர் கடைக்கு வந்த நபர் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்து, அவருக்கு தெரியாமல் ஜெராக்ஸ் எடுத்து, அவருடைய பெயரில் சிம் வாங்கி, அந்த பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்துள்ளான்.
இதை எல்லாம் பொலிசார் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்த போது, பொலிசாரின் தீவிர விசாரணையில் இவர்கள் சிக்கிவிட்டனர்.
அதுமட்டுமின்றி அந்த தம்பதி பிரிவதற்கு இவர்கள் தான் காரணம் என்பதால், அவர்களையும் பொலிசார் அழைத்து நடந்தவற்றை கூறி, இருவரும் சேர்ந்து வாழும் படி அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.