கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 64 இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்படி, கடந்த 6 மாதங்களில் 2,600க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜோர்தானில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் 350க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் கடந்த வாரம் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே, கொரோனா தொற்றினால் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.