க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனடிப்படையில் நாளைய தினம் வௌியாகவுள்ள பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு குறித்த பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இடம்பெற்ற வரும் அமைச்சரவை கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும், இதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.