மினுவாங்கொடவில் பரவும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 739 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இலங்கையில் ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவான சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பியத நான்கு பேர், மூன்று இந்திய பிரஜைகள் மற்றும் கத்தார், குவைத், ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவ்வொருவர் என 10 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று பதிவான 739 தொற்றுக்களில், மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையின் 729 ஊழியர்களும் உள்ளடங்குகின்றனர்.
நேற்று நான்கு சந்தர்ப்பங்களில் சோதனை முடிவுகள் வெளியாகின. முதலில் 220 பேர் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 246, 139 மற்றும் 124 பேர் பாதிக்கப்பட்டதாக கட்டம் கட்டமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 4,252 ஆக உயர்ந்தது.
973 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்த 7 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,266 ஆக உயர்ந்துள்ளது.