கம்பஹா, நீர்கொழும்பின் கந்தானை, ஜாஎல பொலிஸ் பிரிவுகளில் இன்று காலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் கூட்டாளிகள் அந்த பகுதிகளில் உள்ளதால், அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்படும் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
அந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.