அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் செடார் பார்க் பகுதியை சேர்ந்தவர் மேசி கர்ரீன் (வயது 17). இவர் 6 அடி 10 அங்குலம் உயரம் கொண்டு இருக்கிறார். இவரது கால்கள் இரண்டும் 4 அடி நீளம் உள்ளன.
இவர் ரஷ்யாவின் எகாடெரீனா லிசினா என்பவரை பின்னுக்கு தள்ளி உலகின் மிக நீண்ட கால்களை கொண்ட பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். மேசியின் மொத்த உயரத்தில் 60 சதவீதம் அளவுக்கு அவரது கால்களே இடம்பிடித்துள்ளன.
கின்னஸ் உலக சாதனைகளின்படி, மேசியின் இடது கால் 135.267 சென்டி மீட்டர் நீளமும், அவரது வலது கால் 134.3 சென்டி மீட்டர் நீளமும் கொண்டுள்ளன.
இந்த சாதனை பற்றி மேசி கூறும்பொழுது, மற்றவர்களை விட உயரம் அதிகம் இருப்பதற்காக என்னை கிண்டல் செய்தனரே தவிர, என்னுடைய கால்களை யாரும் கிண்டல் செய்யவில்லை. பின்னர் ஆண்டுகள் செல்ல செல்ல, மக்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி நான் கவனத்தில் கொள்ளவில்லை என கூறுகிறார்.
லெகிங்ஸ் வாங்க கடைக்கு சென்ற இவருக்கு தேவையான அளவுக்கு துணிகள் இல்லை. அவரது உயரத்திற்கு சரியான எதுவும் கிடைக்கவில்லை. இதன்பின்னரே உலகின் மிக நீண்ட கால்களை கொண்ட பெண் என்பதற்கான கின்னஸ் உலக சாதனைக்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார்.