ப்ளோரிடா வரலாற்றிலேயே அதிக நீளமுள்ள பாம்பு ஒன்றை பிடித்துள்ளனர் பாம்பு பிடிக்கும் சிலர்.
ப்ளோரிடாவில் இடுப்பளவு ஆழமுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து Ryan Ausburn மற்றும் Kevin ‘Snakeaholic’ Pavlidis என்னும் பாம்பு பிடிக்கும் இருவர் மலைப்பாம்பு ஒன்றைப் பிடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில், Pavlidis அந்த பாம்பை பிடிக்க முயல, அது அவரது உடலை சுற்றி வளைத்து இறுக்க முயல்வதைக் காணலாம்.
வீடியோவில் பார்க்கும்போது உண்மை நிலவரம் தெரியவில்லை, ஆனால், உண்மையில் அந்த பாம்பைப் பிடிப்பது பெரிய போராட்டமாக இருந்தது என்கிறார் Ausburn.
ப்ளோரிடா வரலாற்றிலேயே பிடிபட்ட பாம்புகளில் இதுதான் மிக நீளமானதாம். பிடிபட்ட அந்த பாம்பின் நீளம் 18.9 அடி!




















