மாலியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சுவிஸ் பெண் ஒருவர் கொல்லப்பட்டார் என்ற தகவலை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் ஆதரவு குழுவினரே இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த பெண்மணி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை பிரான்ஸ் நிர்வாகமே வெள்ளிக்கிழமை சுவிஸ் நிர்வாகத்திடம் முறையாக அறிவித்துள்ளது.
ஆனால் கடத்தப்பட்ட சுவிஸ் பெண்மணியை அல்-கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் கடந்த மாதமே படுகொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பலியானவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பாஸல் மண்டலத்தைச் சேர்ந்த மத போதகர் பீட்ரைஸ் என தெரியவந்துள்ளது.
மாலியின் Timbuktu பகுதியில் பல ஆண்டுகளாக மத போதகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் பீட்ரைஸ்.
இந்த நிலையில் 2012 ஏப்ரல் மாதம் தீவிரவாத அமைப்புகளால் கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து 2016-ல் மீண்டும் கடத்தப்பட்ட நிலையில், தற்போது படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் சுவிஸ் பணயக் கைதியை படுகொலை செய்ததற்கான சரியான காரணிகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும், சுவிஸ் நிர்வாகம் மாலி அரசுடன் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதாக உறுதி அளித்துள்ளது.



















