மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் இன்று மதியம் 12 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு தொழிலாளிகள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருக்கையில், மரத்தில் இருந்த குளவிக்கூடுமீது கழுகு மோதியதாலேயே குளவிகள் கலைந்துவந்து கொட்டியுள்ளன.
இதனால் ஐந்து பெண் தொழிலாளர்களும், ஆணொருவரும் பாதிக்கப்பட்டனர்.
மஸ்கெலியா வைத்தியசாலையில் இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.