வவுனியா மணியர்குளம் பகுதியில் குளத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளது.
குறித்தநபர் பிறிதொரு நபருடன் இன்று காலை 7 மணியளவில் மணியர்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
இந்நிலையில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவரை காணாத அவரது நண்பர் தேடிச்சென்று பார்தத போது அவர் குளத்தில் சடலமாக கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்தில் பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கறுப்பையா செல்வராசா வயது 50 என்ற நபரே சாவடைந்துள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சட்டவைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.