சினிமா, சின்னத்திரை சார்ந்த பலருக்கும் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி.
மலையாளம், தமிழ் மொழிகளில் அதிகமான சீரியல்களில் நடித்தவர். கடந்த 6 வருடங்களுக்கு முன் அவருக்கு மூளையில் கட்டி உருவாகி அறுவை சிகிச்சை செய்யும் நிலை வந்தது.
பின் பினு சேவியர் என்பவரை திருமணம் செய்துகொண்டு மீண்டும் படங்கள், சீரியல் என நடித்து வந்தார்.
மீண்டும் அதே மூளை கட்டி பிரச்சனையால் பலரின் நிதியுதவியுடன் அறுவை சிகிச்சை செய்ய இதுவரை 7 முறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறாராம்.
கடந்த ஏப்ரல் மாதம் கூட அவருக்கு ஆப்ரேசன் நடைபெற்றதாம். தற்போது குணமாகியுள்ள அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.
அவர் குணமாகி வந்தாலும் இனி நடிப்பது என்பது சாதியம் தானா என்ற சந்தேகமே. சம்பாதித்த பணத்தை மருத்துவத்திற்கு செலவழித்துவிட்டு தற்போது சிரமத்தில் உள்ளாராம்.