வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் சனிக்கிழமை நடந்த இராணுவ அணிவகுப்பின் போது அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஆளும் கட்சியின் 75 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட வட கொரியா பெரிய இராணுவ அணிவகுப்பு மற்றும் பொது பேரணியை நடத்தியது.
சனிக்கிழமை அதிகாலையில் பியோங்யாங்கின் கிம் இல் சுங் சதுக்கத்தில் இராணுவ அணிவகுப்புக்காக பெரிய கூட்டங்களையும் உபகரணங்களையும் அணிதிரட்டியதற்கான அறிகுறிகள் இருப்பதாக தென் கொரியாவின் கூட்டுத் தலைவர்கள் கூறினர்.
விடியற்காலையில் வட கொரியா இராணுவ அணிவகுப்பை நடத்துவது வழக்கத்திற்கு மாறானது, இருப்பினும் முக்கியமான ஆயுதங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க விடியற்காலையில் அணிவகுப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நகிழ்வில் கலந்துக்கொண்டு பேசிய வட கொரிய தலைவர் கிங் ஜாங் உன், கொரோனா வைரஸ் நெருக்கடி சமாளிக்கப்படும் என்றும், இரண்டு கொரியா நாட்டு மக்கள் மீண்டும் கைகோர்ப்பார்கள் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், வட கொரியாவில் யாருக்கும் கொரோனாவால் பாதிக்கப்படவிலலை என்றும், அதற்கு அவர் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
சமீபத்திய இயற்கை பேரழிவுகளால் வீடுகளை இழந்த கெய்சோங் மற்றும் பிற பிராந்தியங்களில் வசிப்பவர்கள் புதிய வீடுகள் கட்டிதந்ததற்கு கிம் ஜாங் உன் அவர்களை பாராட்டியதாகவும் வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இராணுவ அணிவகுப்பின் போது பயங்கரமான புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ஐசிபிஎம்) உட்பட பல ஆயுதங்களை வட கொரிய வெளிப்படுத்தியுள்ளது.
North Korea unveils new intercontinental ballistic missile (ICBM) during parade pic.twitter.com/BVxgEqe8pF
— Lucas Tomlinson (@LucasFoxNews) October 10, 2020