பிரித்தானியாவில் பாடசாலைகளில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், Happy Birthday என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை சிறார்கள் இனி பாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடல் பாடுவதற்கு பதிலாக வார்த்தைகளாக கூறலாம் எனவும் பாடசாலை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை சில ஆசிரியர்கள் அவர்களை கைதட்ட அனுமதிக்கிறார்கள் என கூறப்படுகிறது.
பாடசாலைகளில் மாணவர்கள் 20 நொடிகள் கைகழுகும் போது இரு முறை பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடலாம் என சமீபத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையிலேயே, அதுகரிக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறித்த பாடலை மாணவர்கள் பாடவேண்டாம் என பாடசாலை நிர்வாகங்கள் தடை விதித்துள்ளன.
மேலும், பிறந்தநாள் இனிப்புகள் எதையும் மாணாக்கர்களிடம் பாடசாலைக்கு கொடுத்தனுப்ப வேண்டாம் எனவும் சில ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.