பிரான்சையும் கடந்து ஈழத்தமிழர்களை அனைவரையும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்திய யாழ்ப்பாணம் சண்டிலிபாயை சேர்ந்த குடும்பத்தவர் ஐவர் படுகொலைக்கு, உணர்வுபூர்வமாக பல்லின மக்களும் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
கடந்த சில தினங்களின் முன்னர் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயை சேர்ந்த நிரோஜினி, நிரோஜன், ஜனனி, வீரா மற்றும் கிக்ஷோர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது.
Noisy-le-Sec நகரில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட மொத்தம் ஐவர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவமானது புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடம்பெற்ற நாளில், குறித்த படுகொலை தொடர்பில் பல்வேறு முரணான தகவல்கள் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வு வெள்ளிக்கிழமை பிரான்சில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் பல்லின மக்களும் பங்கெடுத்திருந்ததோடு, படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளை நினைவுகூர்ந்து வரைபடங்கள், ஒளிப்படங்கள் தொங்கவிடப்பட்டதோடு, பூங்கொத்துக்கள், சுடர்கள் ஏற்பட்டிருந்தன.
இதேவேளை குறித்த படுகொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் மனநல வைத்தியசாலைக்கு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சந்தேகநபர், கொலை இடம்பெற்ற வேளையில் சுயநினைவுடனேயே இருந்துள்ளார் எனத் தெரியவருவதோடு, போதை, மது பழக்கங்களுக்கு அவர் அடிமையாகவில்லை எனவும் கூறப்படுகின்றது.
படுகொலைக்கு உள்ளான 18 மாத கைக்குழந்தையை மூச்சுத் திணற வைத்தே கொலை செய்ததாககவும், கொலைகள் இடம்பெற்ற அன்றைய தினத்தில் வீட்டின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் 10 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் இக் கொலைகள் நிகழ்த்தப்பட்ட்டிருக்கலாம் எனவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இக் கொலைகளுக்கான காரணங்கள் இதுரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.