தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,50,000-ஐ கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 5,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,51,370 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,751 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 392 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அம்மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,725 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,222 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 5,97,033 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,187 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 91,191 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 82,32,725 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.




















