சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்திய குழு உறுப்பினரும், சிபிசி மத்திய வெளியுறவு ஆணையத்தின் அலுவலக இயக்குநருமான யாங் ஜீச்சி தலைமையிலான சீன தூதுக்குழுவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டன.
கடனைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இன்றி 10 ஆண்டு காலப்பகுதியில் கடன் திருப்பிச் செலுத்தப்பட உள்ளது என்று திறைசேரி அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, COVID சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு இந்த கடன் பெரும்பாலும் பயன்படுத்தப்படலாம்.