கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகை அச்சுறுத்த ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்றினால் பல முன்னணி நிறுவனங்களும் முடக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
எனினும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சுதாகரித்துக்கொண்டு தமது பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு பணித்திருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைவடைந்த பின்னர் அனேகமான பணியாளர்கள் மீண்டும் அலுவலகங்களில் சென்று பணியாற்றி வருகின்றனர்.
இப்படியான நிலையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பணியாளர்களை இனிவரும் காலங்களில் வீட்டிலிருந்தே பணியாற்ற முடியும் என தெரிவித்துள்ளது.
அவர்கள் பணியாற்றும் வாரத்தில் 50 சதவீதமான நேரத்தில் வீட்டிலிருந்தே பணியாற்ற முடியும்.
அவ்வாறில்லாவிடில் அனுமதி பெற்று முழுமையாகவே வீட்டிலிருந்தும் தொடர்ந்து பணியாற்ற முடியும் என அறிவித்துள்ளது.