ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் செய்துள்ளானர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரான சுனில் நரைன், அபுதாபியில் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான போட்டியின் போது சந்தேகத்துக்கிடமாகப் பந்துவீசுயதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள்.
ஐபிஎல்-ன் சந்தேகத்திற்கு இடமான சட்டவிரோத பந்துவீச்சு நடவடிக்கைக் கொள்கையின்படி, களத்திலுள்ள நடுவர்கள் (Ulhas Gandhe and Chris Gaffaney) இந்த புகார் அளித்துள்ளனர்.
புகாரை அடுத்து நரைன் எச்சரிக்கை பட்டியலில் வைக்கப்படுவார், மேலும் போட்டிகளில் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒருமுறை சுனில் நரைன் மீது புகார் அளிக்கப்பட்டால் ஐபிஎல் 2020 தொடரில் பந்துவீச அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்படும்.
நரைன், சக்கிங்கிற்காக பல முறை புகார் செய்யப்பட்டார், ஒரு கட்டத்தில் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை, அதன் பிறகு அவர் தனது பேட்டிங் திறனை மேம்படுத்தினார்.
இருப்பினும், கடந்த இரண்டு ஆட்டங்களில் கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.