கொரோனா சிகிச்சைக்கு பின்னர் வெள்ளை மாளிகை திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முதன் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அதில், தாம் கொரோனா சிகிச்சைக்கு பிறகு நன்றாக உணர்வதாகவும், சீன பெருந்தொற்றை கண்டிப்பாக ஒழிப்போம் எனவும் சூளுரைத்துள்ளார்.
மேலும், உங்கள் அனைவரது பிரார்த்தனைகளுக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நமது நாடு இந்த கொடிய சீன பெருந்தொற்றை முறியடிக்கும். நாம் அதற்கான அனைத்து தயாரிப்புகளும் மேற்கொண்டுள்ளோம் என்றார்.
மேலும், கொரோனா பரவல் ஒழிந்து வருகிறது. இது கண்டிப்பாக ஒழியும்.
அமெரிக்கா ஒருபோதும் ஒரு சோசலிச நாடாக மாறாது எனவும், அதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை பால்கனியில், தமது ஆதரவாளர்களிடம் சுமார் 15 நிமிடங்கள் பேசிய ஜனாதிபதி,
கொரோனா ஊரடங்கு என்பது நிரூபணமாகாத ஒன்று, நாட்டில் இனி ஊரடங்கு என்பதை நாம் அனுமதிப்பதில்லை என்றார்.