இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,791 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 39 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள். 14 பேர் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
இந்த 39 தொற்றாளர்களுடன் மினுவாங்கொட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,346 ஆக அதிகரித்துள்ளது.


















