கொழும்பு மரைன் டிரைவில் உள்ள தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB)ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இன்று வங்கி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வங்கி கிளையில் பணிபுரியும் ஊழியரின் நெருங்கிய கூட்டாளிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் சுய தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருமிநீக்கம் செய்யப்பட்டதும், வங்கி நாளை மீண்டும் திறக்கப்படும் என்று வங்கியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.


















