புதிய கொரோனா வைரஸ் பண தாள்கள், மொபைல் போன் திரைகள் மற்றும் எஃகு மேற்பரப்புகளில் ஒரு மாதம் வரை உயிர்வாழும் என்று புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் உள்ள தேசிய அறிவியல் அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் இந்த முடிவை கண்டறிந்துள்ளனர். இந்த மேற்பரப்புக்களில் கோவிட்-19 வைரஸ் 28 நாட்கள் உயிர்வாழும் என தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் குளிர்ந்த வெப்பநிலையில் சிறப்பாக வாழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கண்ணாடி மற்றும் எஃகு போன்ற மேற்பரப்புகளுடன் ஒப்பிடும்போது பருத்தி ஆடைகளில் கொரோனா வைரஸ் அதிகம் உயிர்வாழ்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது.
காற்றில் பறக்கும் துகள்களில் பரவும் கொரோனா வைரஸ் மூன்று மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் ஆராய்ச்சியாளரான டெபி ஈகிள்ஸ், வைரஸின் நடத்தையிலிருந்து பாதுகாக்க எல்லா நேரங்களிலும் உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் என்றார்.
வைரஸ் பரவாமல் தடுக்க பணத்திற்கு பதிலாக மின்னணு கட்டண முறைகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்றும் கூறினார்.