கொழும்பு பொரள்ளை பிரதேசத்தில் இயங்கி வந்த இரண்டு உணவகங்களுக்கு கொழும்பு மாநகர சபை சீல் வைத்து மூடியுள்ளது.
பொரள்ளை றிஜ்வே மருத்துவமனையில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளிகள் இந்த உணவகங்களில் உணவை பெற்றுக்கொண்டமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நோயாளிகள் நடமாடியதாக கூறப்படும், வைத்தியசாலையில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த சிலருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.