கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இன்று மேலும் 43 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் இரணவில, மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க, சீதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 819 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.