கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான ஒரு பரீட்சாத்தமாக கொழும்பில் பல சாலைகளில் உள்ள போக்குவரத்து ஒளி சமிக்ஞைகள் இன்று முதல்தானாகவே இயக்கப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அனைத்து போக்குவரத்து ஒளி சமிக்ஞைகளையும் புதுப்பிப்பதற்கான ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இன்று காலை 6 மணி முதல் வீதி சமிஞ்சைகள் உள்ள இடங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பாணந்துறை, மொரட்டுவை, கட்டுபெத்த, அங்குலான, பொருப்பன, பெலிக்கட சந்தி,மெலிபன் சந்தி மற்றும் டெம்பிளர்ஸ் வீதி சந்தி, தெஹிவளை மேம்பாலம், காலி வீதியில் உள்ள வில்லியம் கிரைண்டிங் மில் சந்தி ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்டபோக்குவரத்து ஒளி சமிக்ஞைகள் இன்று முதல் தானாகவே செயற்படுகின்றன.
கொழும்பு – ஹொரான சாலையில் உள்ள கெஸ்பேவ சந்தி, பிலியந்தலை, போகுண்டரை, பொரலஸ்கமுவ, ரத்தனப்பிட்டி, பெப்பிலியான மற்றும் கொஹுவல சந்திகளிலும் இந்த பரீட்சாத்த திட்டம் அமுல் செய்யப்படும் என்று அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், மாலபே வீதி மற்றும் தலவத்துக்கொட மற்றும் கொட்டவ, பத்தரமுல்ல சாலையில் உள்ள பாலம், கொஸ்வத்தை – பத்தரமுல்ல, எத்துல் – கோட்டே மற்றும் ராஜகிரிய சந்திகளிலும் போக்குவரத்து ஒளி சமிக்ஞைகள் செயல்படும்.
இதனை தவிர தலவத்துக்கொட – நுகேகோடா வீதி, ஒருகொடவத்த, தெமட்டக்கொட, வெலிக்கடை சிறைச்சாலை, பொரள்ளை, டி.எஸ்., கல்லறை, பொலிஸ் வாகன திருத்துமிடம், நாரஹன்பிட்டி, பார்க் வீதி கண்டி சாலையில் உள்ள தொரண சந்தி, நீர்கொழும்பு வீதியில் உள்ள மஹாபாகே சந்தி ஆகியவற்றிலும் மின்சமிஞ்சைகள் தானேகவே செயற்படும் என்றும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.