மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்ய சேது செயலி கொரோனா கிளஸ்டர்களை கண்டுபிடிக்க பெரிது உதவிகரமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.
உலக நாடுகளை தொடந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்து வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்வர்கள் அரசின் கண்ணில் இருந்து தப்பி வி்டாமல் அவர்களை கண்காணிக்க மத்திய அரசு ஆரோக்ய சேது செயலியை உருவாக்கியுள்ளது.
இதனை ஸ்மார்ட் போனில் டவுன்லோடு செய்து விட்டால், நெட்வார்க் மூலம் அவர்களை எளிதாக அடையாளம் காண முடியும். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக கண்டறிய முடியும்.கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ,மட்டுமின்றி விமானம், ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயம் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கொரோனா தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கவும் நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் மொபைல் பயன்பாடுகள் போன்ற தொழில்நுட்பங்கள் பெரிய பயனுள்ளதாக உள்ளன. இந்தியாவில் 15 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆரோக்ய சேது பயன்பாடு” அத்தகைய ஒரு தொழில்நுட்பம் என தெரிவித்தார். இந்த ஆரோக்ய சேது செயலி நகரங்களில் கொரோனா கிளஸ்டர்களை கண்டறிய பெரிதும் உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.