நாமக்கல் மாவட்டம் அணைப்பாளையத்தில் இரு சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை அளித்து வந்த இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி பழனியம்மாள் கணவர் இறந்து விட்டதால் பழனியம்மாள் தனியார் ஜவ்வருசி ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 8 ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகளும் 7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி ரஞ்சிதபிரியா புகார் வந்ததையடுத்து அதிகாரிகள் ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த சிவா,சண்முகம்,முத்துசாமி (75முதியவர் ),மணிகன்டன்,சூர்யா,செந்தமிழ்செல்வம், வரதராஜ், பெரியசாமி 2 சிறுவர்கள் உட்பட 10 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பழனியம்மாள் வேலைக்கு சென்றுவிடுவதாலும் மேலும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டிலேயே 2 சிறுமிகளும் தனியாக இருந்துள்ளனர்.இதனை பயன்படுத்தி கடந்த 6 மாதங்களாக உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமிகளுக்கு தின்பண்டங்கள் கொடுத்தும் மிரட்டியும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்ததாக அதிர்ச்சியுட்டும் வகையில் விசாரணையில் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலர் பேர் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததையடுத்து அவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.