கொரோனாவால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அடுத்த ஆண்டு 8.8% பெருளாதாரம் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் வரலாறு காணத சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்திய பொருளாதாரமும் ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கம் காரணமாக கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனிடையே பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு கடும் சரிவை சந்தித்துள்ள இந்திய பொருளாதாரம் அடுத்த ஆண்டு மீழ்வதற்கான வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் வேல்ட் எக்கனாமிஸ்ட் அவுட்லுக் அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் தொற்றால் இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டு 10.3% என்ற மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு இந்திய பொருளாதாரம் 8.8% உயர்வை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
கணிக்கப்பட்டது போலவே அடுத்த ஆண்டு இந்திய பொருளாதாரம் 8.8% உயர்ந்தால் அடுத்த ஆண்டு பொருளதார வளர்ச்சி விகிதம் சீனாவின் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதமான 8.2% ஐ விட அதிகமாக இருக்கும்” என தெரிவித்துள்ளது .
உலக பொருளாதாரம்:
கொரோனா வைரஸ் தொற்று உலக பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி 4.4% சரிவை சந்திக்கும். இதே அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5.2% என அதிகரிக்கும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் இந்த ஆண்டில் தற்போது உள்ளதைவிட 5.8% அளவு குறையும். ஆனால் அடுத்த ஆண்டு 3.9 சதவீதம் ஆக வளரும். முக்கிய நாடுகளில் 2020 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி என்று பார்த்தால் , சீனாவில் மட்டுமே பொருளதாரம் நேர்மறையான வளர்ச்சியை அடையும். 1.9% நேர்மறையான வளர்ச்சி விகிதம் காட்டும் ஒரே நாடு சீனா மட்டுமே என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
இதனிடையே இந்தியாவின் பொருளாதார பாதிப்பு தொடர்பாக கடந்த வாரம் தெரிவித்திருந்த உலக வங்கி, இந்தியாவின் உள் நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 9.6% சுருங்கும் என தெரிவித்திருந்தது. இந்த பாதிப்பு இதுவரை கண்டதை விட ஒரு மோசமான பாதிப்பு என தெரிவித்துள்ளது