இலங்கை கிரிகெட் வீரரும், மகிந்தவின் கையாளுமான மாத்தையா முரளீதரன் குறித்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பாக தனது அதிருப்த்தியை சேரன் வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இருந்து 800 வேண்டாம் என்று தமிழர்கள் வேண்டு கோள் விடுக்கிறார்கள். உங்களை வாழவைத்த தமிழர்கள் அவர்கள் உணர்வுகளோடு நீங்கள் விளையாட வேண்டாம். தமிழீழ மக்களின் உயிர் போன கொடுமை நிகழ்வை விட இந்த படம் ஒன்றும் பெரிதல்ல. விட்டு விடுங்கள் சகோதரரே… உங்கள் நடிப்பு தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் உள்ளது.
இந்த 800 வேண்டாம் , என்று மிகவும் மரியாதையாக சேரன் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்பாரா சேதுபதி ? இல்லை பணத்தின் பின் அலைவாரா ?




















