தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரபல பாடல் ஒன்றுக்கு நடனமாடி தனது ஆதரவாளர்களை உற்சாகமூட்டியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தனது பேச்சை நிறைவு செய்த பின் அங்கு இசைக்கப்பட்ட வைஎம்சிஏ(YMCA)என்ற பிரபல பாடலுக்கே நடனமாடியுள்ளார்.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ட்ரம்பின் வித்தியாசமான நடன அசைவுகளை கேலி செய்து பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
https://twitter.com/Ravinder536R/status/1315883815567388673