வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீட்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட அவரது வாயில் இருந்து ஒருவகை நுரை வெளயேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



















