ஐஃபோன் நிறுவனம் முதல் முறையாக கார்பன் மாசுவை குறைக்கும் வகையில் இயற்கையான முறையில் ஐபோன் 12 சீரிஸ் தயாரிக்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி ஸ்மார்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் ஒவ்வெரு ஆண்டும் புதிய மாடல் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட ஐபோன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஐபோன் 12 சீரிஸ் மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று முந்தினம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐபோன்கள் அனைத்தும் முதல்முறையாக கார்பன் மாசுவை குறைக்கும் வகையில் 100% கார்பன் சமநிலையுடன் தயாரிக்கப்படவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐபோன் 12 சீரிஸ் மொபைல்ஃபோன்கள் அறிமுக விழாவில் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் சூழலியல் கொள்கை தலைவர் லிசா ஜாக்சன் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் அனைத்தும் முதல் முறையாக 100 சதவீதம் மறுசுழற்சி செய்யக்கூடிய வகையில் அரிதாக பூமியில் இருந்து கிடைக்கும் பொருட்களால் தயாரிக்கப்படவுள்ளாதாக தெரிவித்தார். மேலும் இனி ஆப்பிள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் அனைத்து சாதனங்களும் 100% கார்பன் சமநிலையுடன் தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பசுமைக்குடில் வாயுக்கள் அதிகரிப்பால் உலகம் பருவநிலை மாற்றத்தை சந்தித்து வருவதால் 2030 ஆண்டுக்குள் பருவநிலை பாதிப்புகளை குறைப்பதற்கான ஒரு உந்துதலாக ஆப்பிள் நிறுவனம் கார்பன் சமநிலை தொழில்நுட்ப சாதனங்களை தயாரிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.