மேற்கு லண்டனில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துக்கொண்ட திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
மேற்கு லண்டனில் சவுத்தாலில் டுடர் ரோஸ் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வு தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மோசமான செயல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த திருமண வரவேற்பு நடைபெற்ற இடத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் பவுண்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தற்போதைய கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அமைய திருமணங்களில் 15 விருந்தினர்கள் கலந்துக்கொள்ள மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோபொலிட்டன் பொலிஸார் வெளியிட்டுள்ள காணொளி காட்சியில் விருந்தினர்கள் நிகழ்வு இடம்பெற்ற இடத்தில் குவிந்து காணப்படுகின்றனர்.
இது மிகவும் ஆபத்தான மற்றும் முட்டாள்தனமான விதிமுறைகளை மீறிய செயல் எனவும் விதிமுறைகளை மக்கள் மத்தியில் பரவாமல் பாதுகாக்க உருவாக்கப்பட்டது என பிராந்திய பொலிஸ் கட்டளை அதிகாரி பீட்டர் கார்ட்னர் தெரிவித்துள்ளார்.
திருமணங்கள் போன்ற அதிகளவில் மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு பல மாதங்களாக கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இவ்வாறு வெளிப்படையாக சட்டத்தை மீற வேறு காரணங்கள் எதுவும் இருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இடத்தின் உரிமையாளர் கட்டுப்பாட்டு விதிகளை நடைமுறைப்படுத்தவோ, அங்கு வந்திருந்தவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை எனவும் இதனால், அவருக்கு 10 ஆயிரம் பவுண்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் கட்டளை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த சனிக்கிழமை முதல் பல இடங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. கட்டடங்களில் அதிகளவில் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கட்டுள்ளன.