பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பாரிஸ் நகரின் மையத்திலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள கான்ஃப்லான்ஸ்-செயிண்ட்-ஹானோரைனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் பள்ளி ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதையடுத்து அவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாக்குதல்தாரி சுட்டுக்கொள்ளப்பட்ட போது குறித்த நபர் உயிரிழக்கும் தருவாயில் அல்லாஹு அக்பர் என சத்தமிட்டதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன.