சீனாவின் பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று உலகளாவிய ரீதியில் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. மல்டி பரல் தொடர்பாக நாம் அறிந்து இருக்கிறோம். பல் குழல் எறிகணை என்பார்கள். ஆனால் இது பல் குழல் ஏவுகணை ட்ரோன்கள் ஆகும். இவை அனைத்துமே ஆளில்லா விமானங்கள். மிகச் சிறியவை. தேனிக் கூட்டம் போலச் சென்று. தமது எதிரியை தேடி அழிக்க வல்லவை.
இதுபோல படு பயங்கரமான ஆயுதங்களை இதுவரை உலகில் எந்த ஒரு நாடும் தயாரிக்கவில்லை. ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தலாம். ஆனால் இப்படி தேனிக் கூட்டம் போல வரும் இந்த சிறிய விமானங்களை சுட்டு வீழ்த்துவது என்பது மிகக் கடுமையான விடையம்.