யாழ்.வல்வெட்டித்துறைக்கு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு – கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் யாழ்.வல்வெட்டித்துறைக்கு வந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டு விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வந்திருந்த நிலையில் கிளிநொச்சி – விநாயகர்புரம் பகுதியை சேர்ந்த குறித்த பெண் அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரதேச சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார பிரிவினர் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றியமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினால் வல்வெட்டித்துறை பகுதியில் சிறிது பரபரப்பான நிலை ஏற்பட்டிருக்கின்றது.